விபரீதமான விளையாட்டு... போட்டிப்போட்டு 19 பீர் குடித்த 2 ஐ.டி. இளைஞர்கள் உயிரிழப்பு!
பண்டிகையை நண்பர்களுடன் ஜாலியாகக் கொண்டாட நினைத்த இளைஞர்கள், விபரீதமான போட்டியில் ஈடுபட்டுத் தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டுள்ளனர்.
அன்னமயா மாவட்டம் பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்குமார் (34), சென்னையில் ஐ.டி. ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த புஷ்பராஜ் (26) என்பவரும் வெளியூரில் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்தார். சங்கராந்தி விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர்கள், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த மலைப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, "யார் அதிக பீர் குடிப்பது?" என்ற போட்டி இவர்களுக்குள் எழுந்துள்ளது.

மதியம் 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை இடைவிடாமல் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சுமார் 19 பீர் பாட்டில்களைக் குடித்துள்ளனர். அதிகப்படியான மதுவால் உடலில் நீர்ச்சத்து குறைந்து இருவரும் மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மணிக்குமாரும், சிகிச்சையின் போது புஷ்பராஜும் உயிரிழந்தனர்.
அதிகப்படியான மது அருந்தியதால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயலிழந்ததே மரணத்திற்குப் பிரதான காரணம் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் மது அருந்திய மற்ற 4 நண்பர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மது அருந்தாததே அவர்கள் உயிர் பிழைக்கக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு மது விநியோகம் செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
