முன்னாள் தலைமை செயலாளர் மரணம்... 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

 
சபாநாயகம்

தமிழகத்தின் முன்னாள்   தலைமைச் செயலாளர் சபாநாயகம். இவர் வயது மூப்பு மற்றும்  உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 101. சபாநாயகம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் 1971 ஏப்ரல் முதல் 1976 மார்ச் வரை  தலைமை செயலாளராக இருந்தவர்.  சபாநாயகம்  தமிழகத்தின்  முன்னாள் முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர். கலைஞர் கருணாநிதி  என 3 முதல்வர்களுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  

சபாநாயகம்

ஓய்வு பெற்ற சபாநாயகம் சென்னை ஆர்.ஏ. புரம் பிஷப் கார்டனில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் .  முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , அவரை கௌரவிக்கும் வகையில்  காவல்துறை மரியாதைகளுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.  முதல்வரின் உத்தரவின் பேரில் மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.  

சபாநாயகம்

30 குண்டுகள் முழங்க காவல்துறையினர் இறுதி மரியாதை அளித்த  நிலையில்  பெசன்ட்நகர் மின்மயானத்தில் சபாநாயகம் உடல் தகனம் செய்யப்பட்டது.சபாநாயகம்  33 ஆண்டுகளாக சிவில்சர்வீஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர். 1922  ஜூன் மாதத்தில்  சென்னையில் பிறந்த அவர், 1943ல் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய போது  இந்திய குடிமைப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 1945ல் கோவையில் பொள்ளாச்சியில் துணை ஆட்சியராகவும், பின்னர் சேலத்தில் கலெக்டர்   மத்திய அரசு பணி என பல முக்கிய அரசுப் பணிகளில் பொறுப்பு வகித்துள்ளார்.  1971ல் தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1976ஏப்ரல் மாதம் வரை அப்பதவியில் தொடர்ந்தார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web