எகிறும் எதிர்பார்ப்பு... இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்... மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலை!

உலகம் முழுவதும் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் துபாயில் குவிந்துள்ளனர். இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேராக மோதுகின்றன.
முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கும் அதே நேரத்தில் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இன்றைய போட்டியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில்” இன்று பிப்ரவரி 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போட்டியை கண்டுகளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!