அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி.. அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
Jun 15, 2025, 15:40 IST

தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "பணி சுமை இல்லாமல் சிறப்பாக பணி செய்ய விளையாட்டு ஒரு முக்கியமான கருவி என்று வாழ்த்தினார். இந்த போட்டியில் 10 அணியினர் பங்கு பெற்றுள்ளார்கள். இந்த போட்டிகளை ஆசிரியர்கள் செல்வின் அமீர்தராஜ், ரஞ்சித் குமார் உட்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து நடத்தினர். பெனிட்டன் தொகுத்து வழங்கினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அமைச்சர் சீருடை வழங்கினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!