கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு 25 சதவிகிதம் அபராதம்! ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!

 
அஸ்வின்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு போட்டி பணத்தில் 25 சதவிகிதத்தை அபராதமாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. போட்டி குறித்து நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து ஐபிஎல் விதிகளை மீறி பேட்டியில் கூறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 16வது ஐபிஎல்  போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று முன்தினம் ஏப்ரல் 12ம் தேதி  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில்  போராடி தோல்வியை தழுவியது.

அஸ்வின்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றியை பெற்ற போதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அஸ்வின்

அதே போல் சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது கள நடுவர்களின் முடிவை எதிர்த்து, தனது அதிருப்தியை வெளிப்படையாக கூறி, கருத்து தெரிவித்து விமர்சனம் செய்ததால் ராஜஸ்தான் அணியின் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக நடுவர்கள் பந்தை மாற்றியது குறித்து  அஸ்வின் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web