கிரிக்கெட் வீரர் புஜாரா மைத்துனர் தூக்கிட்டுத் தற்கொலை... வெளியான அதிர்ச்சி காரணம்!
இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சேதேஸ்வர் புஜாராவின் மைத்துனரும், ஏற்றுமதி இறக்குமதித் தொழில் செய்து வந்தவருமான ஜீத் பாபரி (30), குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜீத் பாபரிக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் தாயுடன் வசித்து வந்தார். கடந்த நவம்பர் 26ஆம் தேதி, மாளவியா நகரில் உள்ள தனது பங்களா வீட்டில் அவர் தூக்கில் சடலமாகத் தொங்கினார். குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஜீத் பாபரி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த மன உளைச்சலுக்கு முக்கியக் காரணம், அவர் மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் புகார் வழக்கு எனத் தெரிய வந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில், ஜீத் பாபரிக்கும் ஒரு பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, அந்தப் பெண்ணே ஜீத் பாபரி மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை ஜாமீனில் விடுவித்திருந்தனர்.

சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் அவருக்கு எதிராகச் சில குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு (2024) நவம்பர் 26ம் தேதி தான், அவர் மீது நிச்சயிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே தேதியில், ஓராண்டு கழித்து, அதாவது நவம்பர் 26ம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால், பாலியல் புகார் தொடர்பான வழக்கு தான் அவரது இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
