பகீர் சிசிடிவி காட்சிகள்... சிக்ஸர் அடித்த போது கிரிக்கெட் வீரர் மயங்கி சரிந்து மரணம்!

 
கிரிக்கெட்


 
பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் உள்ள குரு ஹர் சகாய் என்ற இடத்தில்  உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த போட்டியில்   ​​சிக்ஸர் அடித்த ஒருவர்  மயங்கி சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  


இந்த சம்பவம் DAV பள்ளி மைதானத்தில் நடந்ததாகவும், அது ஒரு மொபைல் போனில் பதிவாகியிருப்பதாகவும்  கூறப்படுகிறது. உயிரிழந்தவர் ஹர்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் ஒரு தச்சர் என்றும், அவர் சிறிது நேரம் ஓய்வெடுப்பதை வீடியோவில் காணலாம், பின்னர் திடீரென மார்பைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிகிறார். அவருடன் விளையாடிக் கொண்டிருந்த  சக வீரர்கள் உதவிக்கு விரைந்து வந்து  முதலுதவி செய்தனர். 

ஆனால் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. மருத்துவ உதவி வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறுகின்றனர்.  பஞ்சாபில் கிரிக்கெட் போட்டியின் போது ஒருவர் மயங்கி விழுந்து மரணம்  அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது