அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை!

 
செயின் பறிப்பு

 
 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 2 கொள்ளையர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெளிவானது.

செயின் பறிப்பு

சென்னை திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை   பகுதிகளில் பணிக்கு சென்ற  பெண்கள், நடைப்பயிற்சி   , வெளியில் நடமாடிய பெண்கள் பலரிடம் நிகழ்ந்த இந்த செயின் பறிப்பால் தலைநகர் முழுவதும் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட சென்னை போலீசார் சிசிடிவி காட்சிகள், வாகன பதிவெண் இவைகளை ஆய்வு செய்து விமானம் மூலம் தப்பி செல்ல முயற்சித்த  இருவரை விமான நிலையத்திலேயே கைது செய்தனர். இன்னொரு நபரை ஆந்திரா மாநிலம் நெல்லூரில் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.

மனைவியின் டார்ச்சர் தாங்கல… செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை!!

இந்த கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்ட முக்கிய நபரான ஜாபர் குலாம் ஹூசைன் வடமாநிலத்தை சேர்ந்தவர்  . அவரை இன்று அதிகாலை திருடப்பட்ட நகைகளை மீட்க தரமணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு ஹுசைன் தப்பி செல்ல முயற்சித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தற்காப்புக்காக சுட்டதில் ஹுசைன் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web