விஜய்க்கு நெருக்கடி.. இன்று கரூர் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

 
கரூர்

கரூர் வழக்க்ல் குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயரும் சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திராவில் திரையரங்கில் நடந்த கூட்டநெரிசல் விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், படத்தின் ஹீரோவை ஒரு நாள் சிறையில் அடைத்த சம்பவத்தையும், குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டதையும் உதாரணமாக சொல்கிறார்கள்>

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, இன்று திருச்சி நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர், இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகத் தீவிர விசாரணை நடத்தினர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் என சுமார் 400-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் விஜய்

தவெக தலைவர் விஜய்யை இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அப்போதைய உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டது. திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கரூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தச் சட்ட நடவடிக்கை விஜய்க்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது: விஜய் இன்னும் எந்தக் கூட்டணியையும் அறிவிக்காத நிலையில், அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவே இவ்வளவு அவசரமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!