சென்னையைத் தொடர்ந்து கோவையில் காகங்கள் அடுத்தடுத்து சாவு… பறவை காய்ச்சலா?

 
காகம்
 

கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலையோர மரத்தின் அடியில் காகங்கள் அடுத்தடுத்து இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே சென்னையில் காகங்கள் இறந்து பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவையிலும் இதே நிலை ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி அதிகரித்துள்ளது.

குனியமுத்தூர் பகுதியில் மரத்தடியில் பல காகங்கள் இறந்து கிடந்ததால் பறவை காய்ச்சல் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பறவைகளின் உடல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பறவை காய்ச்சல் பாதித்த பறவைகள் மற்றும் அவற்றின் கழிவுகள் மூலம் மனிதர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்றும் தெரிவித்தனர். கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!