கச்சா எண்ணெய் மீண்டும் 100 டாலர் கடந்து உயர்வு!
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த வார தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலரை கடந்தது. பின்னர் ஜி7 நாடுகள் குழு அவசர கையிருப்பு எண்ணெய்களை வெளியிட முன்வந்ததால் விலை தற்காலிகமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகம் நோக்கி வந்த “மயூரி நரீ” சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகளின் சரக்கு கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் 2 இந்திய மலுமிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல்களுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பீப்பாய் 100 டாலரை கடந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கச்சா எண்ணெய் விலை 130 டாலரை கடக்கும் வரை விலையை உயர்த்த வேண்டாம் என மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
