15 நாட்களில் கச்சா எண்ணெய் 40% உயர்வு... பீதியில் உலக நாடுகள்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கியதிலிருந்து, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மாற்றுப் பாதைகள் இல்லாத நிலையில், இராக், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தியை குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தவோ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை உயர்ந்த நிலையில், தற்போது சுமார் 103 டாலர் வரை விற்பனை ஆகி வருகிறது. உலக சந்தையில் திடீர் விலையேற்றம் காரணமாக பல நாடுகளில் பொருளாதார கவலை அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 73 டாலராக இருந்தது. தற்போது மார்ச் 14ஆம் தேதி வரையில் அது சுமார் 103 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 30 டாலர் அதிகரித்து, சுமார் 41 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து தொடர்ந்து முடங்கினால், வரும் வாரங்களில் உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
