11 மாத கைக்குழந்தை தலையை கல்லில் மோதி கொன்ற கொடூரத் தாய்!

 
போலீஸ் போலீஸ்

மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த பூஜா பவார் (22) என்ற பெண், தனது 11 மாத ஆண் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கடந்த 5-ம் தேதி பூஜா பவாரைத் தனியாகக் கண்டுபிடித்தனர். குழந்தையைப் பற்றிக் கேட்டபோது, அவர் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடினார். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது சுயநலத்திற்காகப் பெற்ற பிள்ளையையே அவர் பலி கொடுத்த உண்மை அம்பலமானது.

ஆம்புலன்ஸ்

தனது கணவரைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட பூஜாவுக்கு, 11 மாதக் குழந்தை இடையூறாக இருந்துள்ளது. மேலும், குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த அவர், துணி துவைக்கும் கல்லில் குழந்தையின் தலையை ஓங்கி மோதி ரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராதபடி குழந்தையின் உடலை ஒரு பையில் திணித்து, அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் வீசியுள்ளார். ஒரு தாயே தனது கைகளால் மகனைக் கொன்றதை வாக்குமூலமாகக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பூஜா பவார் காட்டிய அந்த விவசாயக் கிணற்றில் இருந்து குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்தத் தகாத உறவு மற்றும் மறுமண ஆசையினால் நடந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த ரஞ்சன்காவ் போலீசார், பூஜா பவாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற இந்தச் சம்பவம் புனே பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்டு வரும் நிலையில், அக்குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!