கொடூரம்... 5ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
பள்ளி மாணவி

சென்னையில் கொடூர சம்பவமாக 5ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் எம்.ஜி.ஆர். நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் ரோஷினி (10). இவர் பொழிச்சலூர் ஊராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா வேலைக்கு சென்று வருகிறார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்நிலையில், தான் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி மகள் ரோஷினியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ரோஷினி வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த மாணவி ரோஷினி, தனது தம்பி கண் எதிரிலேயே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web