கொடுமை... தண்டவாளத்தில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்திய ஜோடி!

 
ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்

இன்றைய அவசரயுகத்தில் இளசுகள் எந்நேரமும் கையில் செல்போன், செல்பி, லைக்ஸ், ஷேர்ஸ் என வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். எது நடந்தாலும் எங்கு சென்றாலும் செல்பி மோகம். இதனால் பல நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை கூட கண்டுகொள்வதில்லை. அந்த வகையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மதுகரிபுரா பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பாக “ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்” நடத்துவதற்காக, புதுமண ஜோடி மற்றும் மூன்று புகைப்படக் கலைஞர்கள் தண்டவாளத்திற்கு அருகே சென்றிருந்தனர்.

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம் 

அங்கு  வித்தியாசமாக படமெடுத்துக் கொண்டிருக்கும்போது, அருகில் ரயில் வருவதை கவனிக்காமல் இருந்துவிட்டனர். அதே சமயம் அங்கு வந்த ரயில்வே போலீஸ்காரர், இந்த ஆபத்தான சூழ்நிலையைப் பார்த்து உடனே ஒதுங்க சொல்லி எச்சரிக்கை விடுத்து, அவர்களின் உயிரை காப்பாற்றினர்.

இச்சம்பவத்தில் மணமக்கள் உட்பட 5 பேரும் நூலிழையில்  உயிர்தப்பினர். ரயில் ஓரமாக வந்து கொண்டிருந்த நேரத்தில் புகைப்படம் எடுப்பதில் ஈடுபட்டிருந்தவர்கள், உயிரின் முக்கியத்துவத்தை மறந்து விட்டனர்.

தண்டவாளம்

தண்டவாளத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற இந்த முயற்சி, வெறும் சில விநாடிகள் தாமதமாகியிருந்தால்  உயிரிழப்பில் முடிந்திருக்கலாம். இது போன்ற செயல் முறைகள், போதைப் போல் பரவி வரும் ப்ரீ வெட்டிங் கல்ச்சர் குறித்து  சர்ச்சை கேள்வியை எழுப்புகிறது.இச்சம்பவம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

நெட்டிசன்கள் பலரும், போட்டோஷூட் என்ற பெயரில் இன்றைய தலைமுறையினர் எல்லை மீறிச் செல்வது, தன்முனைப்பும் கவனக்குறைவுமே இதற்குக் காரணம் என விமர்சனம் செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?