தாய் கண் முன்னே கொடூரம்... ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த முருகமணி மகள் தேவி (25). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தேவிக்கு திருமணமாகி உள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கணவரைப் பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். மேலும், தேவி ஆறுமுகனேரி பேரூராட்சியில் ஒப்பந்த சுகாதார பணியாளராக பணியாற்றி வந்தார். தேவி வீட்டில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தாயுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றராம். அவரை பிடிக்க அவரது தாயார் பின்னால் சென்றபோது, வீட்டின் அருகில் உள்ள ரயில் தண்டவளத்தில் திருச்செந்தூரிலிருந்து- திருநெல்வேலி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தேவி தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார் தேவியின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!