மகன் கண்ணெதிரே கொடூரம்... புகாரளிக்க சென்ற கர்ப்பிணி காவலரால் பலாத்காரம்!

 
கர்ப்பிணி

தனது 3 வயது மகன் கண் எதிரே, காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற கர்ப்பிணி பெண், காவலரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது பதைபதைக்க செய்கிறது. 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டம், சன்கணீர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பாகா ராமா(48). இந்நிலையில், இந்த காவல் நிலையத்திற்கு தனது 3 வயது மகனுடன் 32 வயதுடைய பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றுள்ளார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதாக கூறி அழைத்து சென்ற காவலர் பாகா ராமா, அந்த பெண்ணை 3 வயது மகன் கண் எதிரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

உத்தரபிரதேச போலீஸ்

தனது வீட்டின் அக்கம் பக்கத்தினர் மீது புகார் அளிக்கச் சென்றபோது, காவலர் புகாரளிக்க வந்த பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்திருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணின் மகனை பிணையக்கைதி போல பிடித்து வைத்துக் கொண்டு, மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.  

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

தனக்கு நிகழ்ந்த இந்த கொடுமை குறித்து இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண் அளித்த புகாராஇ ஏற்ற உயர் அதிகாரிகள் காவலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட  பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?