பிரியாணி சண்டை… நண்பனை கொன்று புதைத்த கொடூரம்!

 
krishnagiri
 

கிருஷ்ணகிரி பர்கூர் அருகே BRG மாதேப்பள்ளி பகுதி பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 49 வயது சென்னகேசவன், வீட்டின் முன் மர்ம ஆண் சடலம் கிடப்பதாக ஊர்மக்களிடம் கூறியபோது தொடங்கிய சந்தேகம், போலீஸ் விசாரணையில் கொடூர உண்மையாக மாறியுள்ளது. விசாரணையில், இறந்தவர் ஊத்தங்கரையைச் சேர்ந்த கேபிள் ஆப்பரேட்டர் கணேசன் என்றும், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிய வந்தது.

ஆம்புலன்ஸ்

2014–ல் மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கணேசன், கடந்த வாரம் சென்னகேசவன் வீட்டில் தங்கி இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்தியதாக தகவல்கள் வெளிப்படுகின்றன. நவம்பர் 16–ம் தேதி இருவரும் மது அருந்தியபோது பிரியாணி இலை கீழே சிதறிய சின்ன விஷயமே கொலைக்குக் காரணம் ஆனது. வாக்குவாதத்தில் கொதித்த சென்னகேசவன், நண்பனின் கன்னத்தில் அறைந்ததில் கீழே விழுந்த கணேசனை காலால் உதைத்து படுகொலை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலீஸ்

கொடூர செயலை மறைக்க, வீட்டில் ஒன்றரை அடி ஆழ குழி தோண்டி உடலை புதைத்த சென்னகேசவன், பின்னர் மழையால் உடல் மேலே தெரிந்ததும் துர்நாற்றம் வீசியதும் பயந்து எடுத்துக் கொண்டு வீட்டு காம்பவுண்டின் வெளியே போட்டுவிட்டு தானே தகவல் அளித்ததும் அதிர்ச்சி தகவலாக வெளி வந்துள்ளது. போலீசார் சென்னகேசவனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!