கொடூரம்... காவலாளியை அடித்து மெட்ரோ பணிக்கான இரும்பு பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!

சென்னையில் காவலாளியை கல்லால் அடித்து போட்டு விட்டு மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை திருடிச் சென்ற 3 பேரைப் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை OMR சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் ஆட்டோவில் திருடிச் சென்றனர். இதனை தட்டிக் கேட்ட காவலர்களை கல்லால் அடித்துவிட்டு தப்பிச் சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை OMR சாலை கந்தன்சாவடி அருகே நடைபெற்று வரும் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் நேற்று திருடியதாக தெரிகிறது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதனை பார்த்த பாதுகாவலர்கள் ஆட்டோவில் வந்து இரும்பு பொருட்களை திருடியவர்களை தடுக்க முயற்சித்தனர். அந்த மூவரும் சேர்ந்து அவர்களை கல்லால் அடித்து துரத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை பட்டப்பகலில் திருடிக் கொண்டு தப்பி ஓடிய ஆட்டோவில் வந்த 3 பேர் மீது துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட செக்யூரிட்டி சாலமோன் ரிஷிகாந்த சிங் நேற்று போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்ணகி நகரில் வசித்து வரும் 40 வயது முத்து 32 வயது மணிகண்டன், 35 வயது சரத்குமார் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 150 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!