கொடூரம்... ”மாமா, அப்பாவை இரும்பு ராடால் அடித்து கொன்னுட்டேன்” வீடியோ எடுத்து அனுப்பிய மகன்!

 
ஜெகதீஷ் சங்கலா,


 
ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வருபவர் 42 வயது ஜெகதீஷ் சங்கலா .   இவர், சென்னை ஏழு கிணறு வைத்திய நாதன் தெருவில் தங்கி பிரபல தனியார் மிட்டாய் கடைக்கு இனிப்புகள் தயாரித்துக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.  இவருடன் கடந்த இரண்டு மாதங்களாக இவரது மகன் 18 வயது ரோகித்  தங்கி, தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்ததும் தந்தை மகன் இருவரும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

ஜெகதீஷ் சங்கலா,
இன்று அதிகாலை மகன் ரோகித் தனது தந்தை ஜெகதீஷ் சங்கலாவை இரும்பு ராடல் அடித்துக் கொலை செய்து விட்டு அதனை வீடியோவாக எடுத்து தனது மாமா மங்கா ராமுக்கு  அனுப்பி வைத்துள்ளார். மேலும், அவருக்கு போன் செய்து "நான் விமான நிலையம் செல்கிறேன்.. என்னை தேடவேண்டாம்" எனக் கூறியதாக தெரிகிறது.   வீடியோவை பார்த்து அதிர்ந்து போன மங்கா ராம் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து பார்த்த போது  ஜெகதீஷ் சடலமாக கிடந்துள்ளார்.

உடனை மங்கா ராம்  தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார், ஜெகதீஷ் சங்கலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்த பிறகு அனுப்பிய வீடியோவை கைப்பற்றி விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

கைது

அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ரோகித்தை கைது செய்தனர்.  முதற்கட்ட விசாரணையில், தந்தை ஜெகதீஷ் சங்கலா, விடுமுறை காலங்களில் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததுடன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால், தந்தை மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. நேற்று தந்தை - மகன் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரோகித், இரும்பு ராடல் தந்தையை அடித்துக் கொலை செய்து விட்டு அதனை வீடியோவாக எடுத்து மாமாவுக்கு அனுப்பிவிட்டு ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web