கொடூரம்.. கணவன் கண் எதிரிலேயே துடிதுடித்து உயிரிழந்த மனைவி... பைக் மீது லாரி மோதி கோர விபத்து!

 
பைக்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பைக் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது கணவர் படுகாயம் அடைந்தார். 

விபத்து

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜ் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் குருசாமி, இவரது மனைவி முனீஸ்வரி. இருவரும் விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த ஒரு லாரி பைக்கை கடந்து சென்ற போது காற்றின் வேகமாக நிலை தடுமாறிய குருசாமி தனது மனைவியுடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

விபத்து

இதில் லாரியின் பின் டயர் ஏறி இறங்கியதில் முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குருசாமி பலத்த காயம் அடைந்தார். அவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த சாத்தூர் அருகிலுள்ள சத்திரப்பட்டி, ஆனந்தா நகரை சேர்ந்த கந்தசாமி மகன் முத்து மாரீஸ்வரன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது