கதறும் தாய்... பள்ளி முதல்வர் அடித்ததால் பார்வை பறிபோன 3ம் வகுப்பு சிறுமி.!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாக்பூர் மிதோனி முதன்மைப் பள்ளியில் படித்து வருபவர் ஹிமான்ஷி . இந்த மாணவி 3ம் வகுப்பு படித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று ஹிமான்ஷியை பள்ளி முதல்வர் அடித்துள்ளார். இதனால் ஹிமான்ஷியின் ஒரு கண் பார்வை பறிபோய் விட்டதாக கூறப்படுகிறது. மாணவியின் தாயார் ஜோதி காஷ்யப் பள்ளி முதல்வர் மீது கல்வித் துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த புகாரில் , "தனது மகள் பள்ளி முதல்வரால் தாக்கப்பட்டதால் ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறியுள்ளார். முதல்வர் கீதா காரல் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் மாணவிக்கு ஏற்கனவே கண் பார்வை பிரச்சனை இருந்து வந்ததாகவும், ஹீமான்சஷி, பெனஜீர் என்ற மாணவியுடன் பாடப்பணி செய்து கொண்டிருக்கும்போது தவறுதலாக பெனஜிர் ஹிமான்ஷியின் முகத்தில் முட்டியுள்ளார். இதனால் ஒரு கண் வீங்கி விட்டது என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பள்ளி முதல்வரிடம் மருத்துவ சான்றிதழ் கேட்டபோது அதனை வழங்கும் உரிமை என்னிடம் இல்லை என மறுப்பு கூறி விட்டார்". இச்சம்பவம் குறித்து மொராதாபாத் அடிப்படை கல்வி அதிகாரி அஜித்குமார் விசாரணை தொடங்கி நடத்தி வருகிறார். கூடுதல் கல்வி அதிகாரி சிவம் குப்தா தலைமையில் தொடர் விசாரணை பள்ளியில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!