கதறும் பெற்றோர்... அவசர விசா கொடுங்க... அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் இந்திய மாணவி!

 
நீலம் ஷிண்டே


 
மகாராஷ்டிராவின் சதாராவில் வசித்து வருபவர்  நீலம் ஷிண்டே. இவருக்கு வயது 35 . இவர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கிப் படித்து வருகிறார். தற்போது இறுதியாண்டு படித்து வரும் நீலம் ஷிண்டே பிப்ரவரி 14ம் தேதி விபத்தில் சிக்கினார். அதிவேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதித்துள்ளனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தலையில் படுகாயம் காரணமாக  நீலம் ஷிண்டே கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.

இது குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தில்  அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக விசா பெற்று அமெரிக்காவுக்குச் சென்று மகளை பார்க்க முடிவு செய்தனர். இதற்காக அவசர விசா கேட்டு அவரது தந்தை விண்ணப்பித்துள்ளார். ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஆவதால் செய்வதறியாது தவித்து வருகிறார். அவசர விசா கிடைப்பதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

அமெரிக்கா - இந்தியா


இத்தகவல் குறித்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுப்ரியா சுலேவும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்  கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ”இது ஒரு கவலையளிக்கும் பிரச்னை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதைத் தீர்க்க உதவ வேண்டும். நான் அந்தக் குடும்பத்தினருக்கு இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறேன். ஜெய்சங்கருடன் தனக்கு அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள் பிரச்சனை என வரும்போது அவர் நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார். வெளியுறவு அமைச்சகம், எப்போதும் உதவ கூடுதல் முயற்சி எடுப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web