கதறிய சக வீரர்கள்... கால்பந்து விளையாடியபோது மாரடைப்பால் சுருண்டு விழுந்து பலி!

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் வசித்து வருபவர் 55 வயது ராஜன். இவருடைய மனைவி வின்னரசி. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். காலை 6 மணிக்கு திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்திற்கு வந்த ராஜன் விளையாடிக் கொண்டிருந்தார்.
காலை 8:30 மணி அளவில் விளையாடி முடித்துவிட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த சக விளையாட்டு வீரர்கள் ராஜனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ராஜன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக விளையாட்டு வீரர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 3 வருடங்களுக்கு முன்பு ராஜனுக்கு ஏற்கனவே இருதய பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததாகவும், இன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!