ஹவுஸ் ஃபுல்... சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன... ரசிகர்கள் ஏமாற்றம்!

 
சிஎஸ்கே

18-வது ஐபிஎல் தொடர்  போட்டிகள் மார்ச் 22ம் தேதி  கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.
சென்னையில் மார்ச் 23ல் நடைபெறும் 2 வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.  இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.



காலை 10.15 மணி முதல் தொடங்கிய டிக்கெட் விற்பனை சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால்  ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். சிலருக்கு சிஎஸ்கே இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தொழில்நுட்ப கோளாறுகள் உருவானதால்   ரசிகர்கள் சிலர் சிரமத்துக்கு உள்ளாகினர்.
38,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கான டிக்கெட் வரிசை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால் இந்த முறை போட்டியை நேரில் காண முடியாது என சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.  சட்டத்துக்கு புறம்பான தளங்களில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதிக விலைக்கு கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக  ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?