சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு புதிய ஜெர்சி அறிமுகம் !

 
சிஎஸ்கே சிஎஸ்கே

இந்திய முதன்மை இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2026ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த சீருடை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டிகளை முன்னிட்டு அணி தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய சீருடையை அணியின் தலைவர் ருதுராஜ் கைக்வாட் அறிமுகப்படுத்தினார். அணி வீரர்களின் உற்சாகத்தையும் ரசிகர்களின் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அணி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்காக சிறப்பு பேருந்தும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து மூலம் அணியின் விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர் தொடர்பு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய சீருடையும் ரசிகர் பேருந்தும் அறிமுகமானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!