போதை வழக்கில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் மீது கஸ்டடி விசாரணை தீவிரம்!
சென்னையில் போதைப் பொருள் வழங்கிய வழக்கில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடிகர் சிம்புவின் முன்னாள் மேனேஜர் சர்புதீன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். சர்புதீன், சரத் ஆகிய இருவரையும் டிசம்பர் 7ஆம் தேதி ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை செய்தனர். அந்த விசாரணையிலேயே நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் தினேஷ்ராஜின் பெயர் வெளிவந்தது.
அதனை தொடர்ந்து தினேஷ்ராஜ் (32) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி அனுமதி அளித்ததால், தினேஷ்ராஜை சிறையிலிருந்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இன்று மாலை விசாரணை முடிந்ததும் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறைக்கு அனுப்ப உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
