க்யூட் க்ளிக்ஸ்... பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண்குழந்தை!

நடிகை எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய கேரியரை மாடலாக மிக இளம் வயதிலேயே தொடங்கினார். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். பழைய சென்னையை மையமாக வைத்தும்... ஆங்கிலேயர்கள் ஆட்சியை மையப்படுத்தியும் வரலாற்று கதையாக எடுக்கப்பட்டது.இந்த படத்தில், எமி ஜாக்சன் துரையம்மாவாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இவருடைய கதாபாத்திரம் மற்றும் அழகு ரசிகர்களை இவருக்கு தமிழில் பல ரசிகர்களை உருவாக்கியது.
'மதராசபட்டினம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தன. அதன்படி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்த எமி ஜாக்சன், தமிழில் தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்தார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த தாண்டவம், 2.0, தெறி, வேலையில்லா பட்டதாரி, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் நடிப்பில் கடைசியாக நடிகர் அருண் விஜய்யுடன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆக்சன் கதைகளத்தில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து ஆக்க்ஷனிலும் பின்னி பெடல் எடுத்திருந்தார். இதன் பிறகு ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், ஹாலிவுட்டில் கவனம் செலுத்த துவங்கினார்.
2015 ல் ஜார்ஜ் என்பவரை காதலித்து அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த எமி ஜாக்சன்... அவர் மூலம் கர்ப்பமாகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தபிறகு அவரை 2021ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது எமி ஜாக்சனின் முதல் கணவரின் மகன் எமி ஜாக்சனுடன் தான் உள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக எட் வெஸ்ட்விக் என்ற ஹாலிவுட் டிவி நடிகருடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். எட் வெஸ்ட்விக் மூலம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி, பின்னரே அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்து விட்டதாகவும், இரண்டாவதாக ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ள தகவலையும் அறிவித்துள்ளார். குழந்தைக்கு Oscar Alexander Westwick என பெயரிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். கணவர் மற்றும் குழந்தையோடு எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!