சதிராடும் சைபர் குற்றங்கள்.. அமித்ஷா அச்சம் ? உலக நாடுகளுக்கு எச்சரிக்கை !!

 
சைபர் க்ரைம்


ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி, நாடு முழுதும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரியானா மாநிலம் குர்கானில், பாதுகாப்பு குறித்த ஜி20 நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது... உலகம் முழுதும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளது. மனிதர்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மக்களுக்கு தீங்கு இழைக்கும் கொடூர சமூக விரோத சக்திகளும் உள்ளன.

அமித்ஷா
டிஜிட்டல் உலகத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு நடவடிக் கைகள் அவசியம். ஹேக்கிங் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் உலக அளவில் மிகவும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவது, சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால், எதிர்காலத்தில் சைபர் குற்றங்கள் பன் மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது, தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிய வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சைபர் குற்றங்களை சமாளிக்க, நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.


சைபர் கிரைம் என்பது, மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் கணினி, இணையம் மூலமாக நடைபெறும் குற்றச்செயலாகும். இந்த சைபர் குற்றங்கள் கிரிமினல்களின் லாபத்திற்காகவும், கணினிகளை சேதப்படுத்த அல்லது செயலிழக்க வைக்க நடத்தப்படுகிறது. சிலர் தீங்கிழைக்கும் Virusகளை பரப்பி இணையத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
எவை எவை சைபர் குற்றங்களாக கருத்தப்படுகிறது தெரியுமா ?

சைபர் க்ரைம்
தனிப்பட்ட நபர்களின் அந்தரங்க தகவல்களை அவரின் அனுமதி இல்லாமல் இணையம் வழியே திருடுதல் அந்த தகவல்களை கொண்டு அவர்களை மிரட்டுதல், பணிய வைத்தல்.
இன்டர்நெட் பேங்கிங் Login தகவல்களை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல்களை திருடி அதன் மூலம் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்தல்.
சில நபர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அதை இணையத்தில் பரப்புதல். கணினி அல்லது சாதனங்களை சேதப்படுத்துதல் அல்லது செயலிழக்க செய்தல்.
ஒருவரின் அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக ஆன்லைன் வழியாக அவரை கண்காணித்தல். சட்டவிரோதமாக லாபத்தை பெரும் நோக்கில் தகவல்களை மாற்றுவது, சேதப்படுத்துவது, அழிப்பது இப்படி நீண்டு கொண்டே போகிறது குற்றத்தின் வகைகள் நாம்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web