கடற்கரை பக்கம் போகாதீங்க... சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 
புயல் எச்சரிக்கை கூண்டு
 

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. டிட்வா புயல் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வடதமிழக, புதுச்சேரி கடலோரத்தில் நிலவி அதிகபட்ச மழை, கடல் சீற்றத்துடன் தொடர்புடையதாக உள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கில் 50 கி.மீ. தொலைவில் நிலவி இருக்கும் டிட்வா புயல் பரவலாக பலத்த மழை பெய்து, தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. கடந்த இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பலத்த மழை எச்சரிக்கை வலுவிழந்ததால் நீக்கப்பட்டிருந்தது.

தைவான் சீனா புயல் கனமழை  மழை வெள்ளம்

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழையின் தீவிரம் மீண்டும் அதிகரித்து வருகின்றது. பொதுமக்களுக்கு அவசரச் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!