புயல் எதிரொலி: இன்று ராமேஸ்வரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!
வங்கக் கடலில் 'டித்வா' புயல் உருவெடுத்துள்ள நிலையில், ராமேசுவரம் வட்டாரத்தில் தொடரும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 28, வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி, தற்போது 'டித்வா' புயலாக வலுப்பெற்று வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே பலத்த காற்று வீசி வருவதுடன், தொடர் மழையும் பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் இன்று (நவ. 28) பல மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், கடல் பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இன்று (நவம்பர் 28) ராமேசுவரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. தொடர் மழையால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

புயல் எச்சரிக்கைத் தொடர்ந்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இன்று ஐந்தாவது நாளாகக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அனைத்துப் படகுகளும் கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
