மடகாஸ்கரில் ‘கெஸானி’ புயல் தாக்கம்... 20 பேர் உயிரிழப்பு!
உலகின் நான்காவது பெரிய தீவு நாடான மடகாஸ்கர் கடல்பகுதியில் உருவான ‘கெஸானி’ புயல், அந்நாட்டின் கிழக்கு நகரமான டோமாசினாவை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.10) மாலை முதல் அப்பகுதியில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது.

சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் டோமாசினா நகரில் பல வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புயலின் தாக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 33 பேர் படுகாயமடைந்ததுடன், சுமார் 15 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயலால் மின்சார கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்ததால் நகரம் முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் அதிகம் என மடகாஸ்கர் வானிலை சேவை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட டோமாசினா நகரை மடகாஸ்கர் அதிபர் மைக்கேல் ராண்ட்ரியானிரினா நேரில் பார்வையிட்டார். நகரின் 75 சதவீத கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
