இந்தோனேசியாவில் சென்யார் புயலால் பேரழிவு... 500 பேர் பலி, 14 லட்சம் பேர் பாதிப்பு!

 
சென்யார் சென்யார்
 

ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இந்தோனேசியா கடந்த வாரம் தொடங்கிய பெருவெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. மலாக்கா ஜலசந்தியில் அரிய வகையாக உருவான ‘சென்யார்’ சூறாவளி புயல், வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே என மூன்று மாகாணங்களிலும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் 14 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி, குறைந்தது 500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வெள்ள நீர் சுனாமியைப் போன்ற வேகத்தில் ஊரகப் பகுதிகளில் ஊறியதால் மக்கள் தப்பிக்க முடியாமல் பரிதவித்ததாக அசே மாகாணத்தைச் சேர்ந்த அரினி அமலியா சோகத்துடன் தெரிவித்தார். “என் பாட்டியின் வாழ்நாளில் இதுபோன்ற மோசமான நிலைமையை அவர் பார்த்ததில்லை” என்று அவர் கூறியதும் அங்கு ஏற்பட்ட பேரழிவின் தீவிரத்தைக் காட்டுகிறது. வெள்ளத்தில் பாலங்கள் அடித்து செல்லப்பட்டு, சாலைகள் மணலால் மூடப்பட்டு, சேறும் சகதியும் நிறைந்த சூழல் மீட்புப்பணியை மேலும் சிரமப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள நிலையில், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் கடந்த மூன்று நாட்களாக உணவின்றியும் குடிநீரின்றியும் அவதிய прежந்தின்றனர். மின் இணைப்பும், இணைய வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து ராணுவம், மீட்பு படை, தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!