டித்வா புயல் பாதிப்பு... இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு!

 
டித்வா புயல் டித்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயலால், அண்டை நாடான இலங்கையில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகப் புதிய அவசர உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

'டிட்வா' புயல் இலங்கைக் கடலோரப் பகுதிகளில் நிலவியதால், பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட தகவலின்படி, புயல் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 100-க்கும் அதிகமானோரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டித்வா புயல்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடியாக உதவும் வகையில், மத்திய அரசு நிவாரணப் பொருள்களுடன், 80 வீரர்களைக் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையையும் (NDRF) அனுப்பி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இலங்கையில் உள்ள இந்திய நாட்டவர்களை மீட்கும் மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் முயற்சியில் இந்தியத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில், கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்தியத் தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது.

புயல்

விமான நிலையத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலோ சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்தியர்கள், உடனடியாக உதவி பெற, +94773727832 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணை வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விமான நிலையத்தில் உள்ள இந்திய உதவி மையத்தில், பயணிகளுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!