'டித்வா' புயல்... தூத்துக்குடி துறைமுகத்தில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'டித்வா' புயலின் அச்சுறுத்தல் காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது, துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்குப் பேராபத்து ஏற்படலாம் என்பதைக் குறிக்கும் எச்சரிக்கையாகும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது வலுவடைந்து 'டித்வா' புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் தற்போதைய நிலவரப்படி, சென்னையிலிருந்து தெற்கே சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

புயலானது மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாகக் காற்றின் வேகம் கடலோரப் பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள அனைத்து மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களுக்கு அபாயம் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக, 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்தப் புயல் சூழலைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையும், போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்கள் அனைவரும் தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
