புயல் எச்சரிக்கை.. நாளைக்குள் மீனவர்கள் கரைக்குத் திரும்ப எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக, கடலுக்குச் சென்ற மீனவர்கள் அனைவரும் நாளைக்குள் (நவம்பர் 24) அவசரமாக கரைக்குத் திரும்ப வேண்டும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நவம்பர் 22-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அதே இடத்தில் 'ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக' வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை (நவம்பர் 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் (நவம்பர் 26-க்குள்) இது தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாகும் அபாயம் உள்ளதால், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம்.

ஏற்கனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் அனைவரும், மழை மற்றும் காற்று பலத்தடிப்பதற்கு முன், நாளைக்குள் (நவம்பர் 24) பத்திரமாக கரைக்குத் திரும்பிவிட வேண்டும் என வானிலை மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினரின் அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
