புயல் எச்சரிக்கை.. உடனடியாக கரைக்குத் திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

 
புயல் கடல் கொந்தளிப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக, கடலுக்குச் சென்ற மீனவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் அவசரமாக கரைக்குத் திரும்ப வேண்டும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அதே இடத்தில் 'ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக' வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

இந்நிலையில் நவம்பர் 26ம் தேதிக்குள் இது தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாகும் அபாயம் உள்ளதால், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

ஏற்கனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் அனைவரும், மழை மற்றும் காற்று பலப்படும் முன்பாக இன்று மாலைக்குள் பத்திரமாக கரைக்குத் திரும்பிவிட வேண்டும் என வானிலை மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினரின் அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!