புயல் முன்னெச்சரிக்கை | இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்று, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் 'டிட்வா' புயல் காரணமாக, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை, நவ. 28) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையின் காரணமாக, உடனடியாகச் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் முதல் (பிற்பகல்) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று மதியம் முதல் (அரை நாள்) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையையடுத்து, இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 28) ஒரு நாள் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த மேலும் புதிய அறிவிப்புகள் ஏதேனும் இருப்பின், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
