வங்கக்கடலில் புயல் தீவிரம்.. 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! - 3 நாட்களுக்கு கனமழை!

 
கரையோர மக்களே உஷார்... 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று நவம்பர் 27ம் தேதி காலைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இது மேலும் வலுப்பெற்றுப் புயலாக மாறவும், தமிழகக் கடலோரத்தை நோக்கி நகரவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வுக் காரணமாக, வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற நவம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் வலுவடைவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.புயல் எச்சரிக்கை எண்துறைமுகங்களின் விவரம்1-ம் எண் கூண்டு சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் 3-ம் எண் கூண்டு.பாம்பன், தூத்துக்குடி

1-ம் எண் புயல் எச்சரிக்கை: துறைமுகத்திற்கு அருகே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. துறைமுகத்தில் இருந்து வெகு தொலைவில் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.

 எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: துறைமுகத்தில் திடீர் காற்றோட்டத்துடன் பலத்த காற்று வீசும். உள்ளூர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.சூறாவளிக் காற்று எச்சரிக்கை:வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் மூன்று நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!