தீர்த்தவாரி விழாவில் சிலிண்டர் வெடிப்பு: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி...!

 
தீர்த்தவாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் ஹைட்ரஜன் கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வெங்காயவேலூர் இனாம்காரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலா (55) உயிரிழந்தார்.

ஸ்டாலின்

இந்த துயரமான சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 18 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!