மாதத்தின் முதல் நாளில் அதிர்ச்சி... வணிக சிலிண்டர் விலை உயர்வு!
சர்வதேச சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலையில் அதிரடி உயர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை ₹50 உயர்ந்து, தற்போது ₹1,899.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கெனவே அதிகரித்த செலவுகளுக்கு நடுவில், சிலிண்டர் விலை உயர்வு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. சென்னையில் 14.2 கிலோ வீட்டு சிலிண்டர் ₹868.50 என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு சிலிண்டர் விலை நிலைத்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
