சிலிண்டரை பதுக்கினால் 7ஆண்டுகள் சிறை ... எஸ்மா சட்டம் அமல்!
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்யும் கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தட்டுப்பாடு பெரும்பாலும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் உணவகங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் சீராக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
