தேநீர் கடைகளில் வடை, பஜ்ஜி விலை உயர்வு... சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி!
தமிழ்நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் பல தேநீர் கடைகளில் டீ, காபி, வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் பகுதியில் முன்பு ரூ.8க்கு விற்கப்பட்ட வடை, பஜ்ஜி, போண்டா போன்ற பொருட்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது. ஒரு பொருளின் விலை ரூ.2 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலே இதற்குக் காரணம் என கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது கடைகளில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் தேநீர் கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சிறிய உணவகங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
