சிலிண்டர் லாரியை சிறை பிடித்த மக்கள்... கோவையில் பெரும் பரபரப்பு!

 
சிலிண்டர் சிலிண்டர்

கோவை ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், அப்பகுதிக்கு வந்த சிலிண்டர் லாரியைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்பதிவு செய்தும் சிலிண்டர் தராதது ஏன் எனக் கேள்வி எழுப்பி, விநியோக நிறுவன ஊழியர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமானது.

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களும் கிடைக்காமல் இல்லத்தரசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தச் சூழலில் வந்த லாரியை மக்கள் விடாப்பிடியாகச் சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேஸ் சிலிண்டர்

தகவலறிந்து வந்த ஆலாந்துறை போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் எரிவாயு நிறுவனத்துடன் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிலிண்டர்களை உடனே விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். உரிய நேரத்தில் போலீசார் தலையிட்டதால் நிலைமை சுமுகமாக முடிவுக்கு வந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!