டிசம்பரில் அப்பா... ஜனவரியில் தங்கை... பிரபல பாடகி, நடிகை சித்ராவின் சகோதரி விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
ஓமனில் வசித்து வந்த பிரபல பாடகியும், நடிகையுமான சித்ரா ஐயரின் சகோதரி ஷாரதா ஐயர், அங்குள்ள மலைப்பகுதியில் மலையேற்றம் மேற்கொண்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஓமனின் அல் தாகிலியா மாகாணத்தில் உள்ள ஜெபல் ஷம்ஸ் (Jebel Shams) பகுதி. இது ஓமனின் மிக உயரமான மலைச்சிகரமாகும்.
கடந்த ஜனவரி 2ம் தேதி, ஷாரதா ஒரு குழுவினருடன் இணைந்து 'வாடி குல்' என்ற கரடுமுரடான பாதையில் மலையேற்றம் செய்துள்ளார். மிகவும் செங்குத்தான பாறைகள் மற்றும் சவாலான நிலப்பரப்பைக் கொண்ட அந்தப் பகுதியில் நிலைதடுமாறியதில் அவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாரதாவின் தந்தை கிருஷ்ணன் நாயர் கடந்த டிசம்பர் 11ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓமனில் இருந்து கேரளா வந்திருந்த ஷாரதா, சடங்குகளை முடித்து விட்டு கடந்த டிசம்பர் 24ம் தேதி தான் மீண்டும் ஓமன் திரும்பியுள்ளார். தந்தை மறைந்த ஒரு சில வாரங்களிலேயே மகளும் உயிரிழந்தது அக்குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.

உயிரிழந்த ஷாரதா ஐயர், ஓமன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் மேலாளராகப் பணியாற்றியவர். தற்போது அவரது உடலை ஓமனில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
