தினசரி அடி, உதை... கணவன் டார்ச்சர் தாங்காமல் 2 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த நர்சிங் மனைவி!

கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்து வருபவர் 42 வயது ஷைனி . இவருடைய கணவர் 44 வயது லோபி லுகோஸ். இவர்களுடைய மகள்கள், 10 வயது இவானா, 11 வயது அலினா. இதில் லோபி அடிக்கடி தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் ஷைனி பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ளார். இதனால் அவர் செவிலியராக பணிபுரிய விரும்பிய நிலையில் அதற்கும் லோபி விடவில்லை.
இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்தார். இதனால் ஷைனி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் விவாகரத்துக்காக கோர்ட்டில் விண்ணப்பித்த நிலையிலும் லோபி தன்னுடைய மனைவியை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.
இதனால் ஷைனி தன்னுடைய இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு வேதனையில் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. எட்டுமுனூர் ரயில்வே நிலையத்திற்கு சென்று ரயில் முன்பாக பாய்ந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் மூவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக லோபி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!