புகழ்பெற்ற சிவன் கோவில் கருவறைக்குள் இளம்பெண் நடனம்.. யூட்யூப் வீடியோவால் கொந்தளித்த பக்தர்கள்!

 
பாடகியுமான மங்லி

நாட்டிலேயே பிரசித்தி பெற்ற பரிகார சிவ ஸ்தலமாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி கோவில் விளங்கி வருகிறது. சைவ ஷேத்திரங்களில் ஒன்றான இக்கோவில் ராகு கேது பரிகார பூஜைக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது. நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இந்த கோவிலுக்குள் கேமரா, செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு தெலுங்கில் பிரபலமாக இருக்கும் யூடியூபரும், பாடகியுமான மங்லி குழுவினரின் கோவிலுக்குள் படப்பிடிப்பு நடத்தியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.  மங்லி தெலுங்கு திரையுலகில் பிரபல பாடகியாக உள்ளார். வசீகர குரல்கொண்ட இவர் பல ஹிட் பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். பக்தி பாடல்களை பாடி தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பாடகியுமான மங்லி

இந்த நிலையில் தற்போது ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் அதிகாலை நேரத்தில் நாட்டியத்துடன் கூடிய 'பம்பம் போலே' என்ற பாடலின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, ஞானபிரசன்னாம்பிகை தாயார் சன்னதி, ஸ்படிகலிங்கம் சன்னதி, ராகு கேது பரிகார பூஜை மண்டபம், ஊஞ்சல் சேவை மண்டபம் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் மங்லியின் நடனமாடி அதனை காட்சிகளாக பதிவு செய்துள்ளனர். 

தற்போது இந்த பாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், சிவ பக்தர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கருவறைக்குள் செல்வதற்கு அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் சிவன் சிலைக்கு அபிஷேகம் செய்வது, பூஜைகள் செய்வது படமாக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடகி மங்லி

ஆகம விதிகளின்படி கோவிலுக்குள் கேமரா, செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தப் பாடல் காட்சியை படமாக்கியது எப்படி என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 
இந்த பாடலை படமாக்க அனுமதி வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web