நடனம் ஆடி சிக்னல் கொடுத்த போக்குவரத்து காவலர்... வைரல் வீடியோ!

 
போக்குவரத்து காவலர்

மத்தியப் பிரதேசம் இந்தூரில் பணியாற்றிய போக்குவரத்து தலைமைக் காவலர் ரஞ்சித் சிங், மைக்கேல் ஜாக்சன் போல மூன் வாக் நடனம் ஆடி சிக்னல் கொடுத்தார். இதன் வீடியோ டிவி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து மத்தியப் பிரதேச காவல்துறை விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

இந்த விவகாரத்தில், தலைமைக் காவலராக இருந்த ரஞ்சித் சிங்கை காவலராக பதவி இறக்கம் செய்து கூடுதல் துணை ஆணையர் ராஜேஸ் தந்தோத்யா உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பே, சமூக ஊடகம் மூலம் தொடர்பு கொண்ட பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், சாலையில் நடனம் ஆடி போக்குவரத்து பணியில் ஈடுபட்டது ஒழுங்கு மீறல் எனக் கருதப்பட்டது. அதனால் கடும் நடவடிக்கையாக பதவி இறக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!