பகீர்.. பூமிக்கு ஆபத்து? உடைந்தது சூரியன்.. வட துருவத்தில் நெருப்பு சூறாவளி!

 
சூரியன்

வானியல் நிகழ்வுகள் எப்போதுமே மனிதகுலத்தை வியப்பில் ஆழ்த்தும். ஏனெனில் வானில் உள்ள கோள்களுக்கு சென்றுவந்தவர்கள் வெகு சிலரே. இதனால் அங்கு நடக்கும் நிகழ்வுகள் எப்போதும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் பார்ப்பதுண்டு.

அந்த வகையில் முக்கியமானதாக கருதப்படும் சூரியன் எப்போதுமே பல்வேறு சுவாரஸ்யங்கள், புதிர்களை உள்ளடக்கிய கிரகமாகவே உள்ளது. அவ்வப்போது சூரியனைப் பற்றி சில விந்தையான தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டு வருகின்றனர். 

சூரியன்

சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதற்காக நாசா அமைப்பு, பார்க்கர் சோலார் புரோப் என்ற பெயரிலும், ஐரோப்பிய அமைப்பு சோலார் ஆர்பிட்டர் என்ற பெயரிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர். சூரியனின் வட துருவத்தின் ஒரு பகுதி உடைந்து விழும் தருணத்தை இதுவரை கண்டிராத வகையில் நாசா படம்பிடித்துள்ளது இதுதான் உறுதித்தன்மைக்கு மூலதனம். இது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சூரியன்

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக பதிவு செய்யப்பட்ட அந்தக் காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், போலார் வோர்டக்ஸ் பற்றிதான் எல்லாப் பேச்சும் நடைபெறுகிறது. சூரியனின் வடக்குப் பக்கத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டது. அது இப்போது போலார் வார்டக்ஸாக சூரியனின் வட துருவத்தில் சுற்றி வருகிறது. இதன் தாக்கத்தை பற்றிதான் ஆராய்ந்து வருகிறோம், என  தெரிவித்துள்ளார்.

சூரியனில் அவ்வப்போது சூறாவளிகள் ஏற்படும். ஆனால், இப்போது சூரியனின் வடக்குப் பகுதியில் அதிலிருந்து ஒரு துண்டே உடைந்து, சூரியனின் வட துருவத்தின் மேலே சுழன்று கொண்டிருப்பதால், பூமிக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்தியாவும், சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டு, அதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2023-ம் ஆண்டில் இந்த திட்ட செயல்பாடு நடைமுறைப்படுத்த முடிவாகி உள்ளது. இதன் நோக்கம், சூரியனின் மேற்பரப்பு, சூரிய புயல், சூரிய வெடிப்பு, பிளாஸ்மா வெளியேற்றம் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்யப்படும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web