ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தான சாலை சாகசம்... அதிர்ச்சி வீடியோ!
ஹைதராபாத் அத்தாபூர் எக்ஸ் சாலைகள் பகுதியில், இரண்டு ஓடும் ஸ்கூட்டர்களின் மேல் நின்றபடி அபாயகரமான சாகசம் செய்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த ஆபத்தான சாகசத்தால், அவர் உள்ளூர் மக்களிடையே ‘ஹைதராபாத் அஜய் தேவ்கன்’ எனப் பெயரெடுத்துள்ளார். வீடியோவிலிருந்த TG 12 A7198 எண் கொண்ட ஸ்கூட்டர் போலீஸ் விசாரணையில் அடையாளம் காணப்படுள்ளது.
Hyderabadi ‘Ajay Devgan’ spotted near Attapur performing dangerous stunts,standing with both legs on two moving scooties. One of the scooties’ registration numbers is TG 12 A7198. After risking lives, they upload reels/shorts on Instagram & YouTube. @CYBTRAFFIC @hydcitypolice pic.twitter.com/WOT457Oswh
— Deccan Daily (@DailyDeccan) November 28, 2025
சாலை பாதுகாப்பு விதிகளை மீறும் இத்தகைய சாகசம், மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 187-ன் கீழ் தண்டனைக்குரியது. இந்தக் குற்றத்துக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனையோ அல்லது ₹5,000 அபராதமோ விதிக்கப்படலாம் என போக்குவரத்து ஆணையர் மகேஷ் பகவத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற தளங்களில் வைரல் ஆவது நோக்கத்திலேயே இதுபோன்ற ஆபத்தான நிகழ்வுகள் கூட்டம் நிறைந்த இடங்களில் நடைபெறுகின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்துடன், சாலைகளில் சாகசம் செய்து பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் தொடர்பாக இதுவரை 47 புகார்கள் போலீசாருக்கு வந்துள்ளன. அத்தாபூர், ஷம்ஷாபாத், கச்சிபௌலி உள்ளிட்ட பரபரப்பான பகுதிகளில் சிறப்பு சோதனைப் பணி தீவிரப்படுத்தப்பட்டு, கடந்த 15 நாட்களில் 12 பேருக்கு எதிராக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வைரலான இந்த வீடியோ உட்பட, இதுபோன்ற உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சாகசங்களை கவனித்தால் உடனடியாக 100-ல் தகவல் தர வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
